வடமொழிக் காப்பியங்கள்

இந்தியாவின் தொன்மையான மொழிகளுள் வடமொழி எனப்படும் சமஸ்கிருதமும் ஒன்று.  வடமொழியின் இலக்கண இலக்கியங்களின் செல்வாக்கு தமிழைத் தவிர பிற இந்திய மொழிகளில் நிறைந்திருப்பதை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.  “காவியம்” என்ற சொல் நான்கு வேதங்களுள் ஒன்றான இருக்கு வேதத்திலேயே காணப்படுகிறது.  செய்யுள், உரைநடை, தூது நூல், நாடகம், பெருங்காப்பியம் என பல வடிவங்களில் அமைந்திருந்தாலும் அவற்றைக் காவியம் என்று அழைக்கும் முறை வடமொழியில் உள்ளதால், காவியம் என்ற சொல் அம்மொழியில் விரிந்த பொருளுடன் விளங்குகிறது எனலாம்.  ஆங்கிலத்தில் உணீடிஞி என்பதற்கு நிகரான இலக்கியப் படைப்பினை “மகா காவியம்” என்று வடமொழியில் வழங்குவதைக் காண்கிறோம்.  பாமகரின் ‘காவ்யாலங்காரம்’ என்னும் நூல் மகா காவியம் பற்றிக் கூறுகிறது.  பின்னர் தண்டியின் ‘காவ்யாதர்சம்’ இவ்விலக்கணத்தைச் சற்றுச் செம்மைப்படுத்தி வழங்கியது.  தண்டியின் இவ்வடமொழி நூல் தமிழில் தண்டியலங்காரம் எனப் படைக்கப்பட்டுள்ளதை அறிவோம்.  இவையன்றி இன்னும் பல இலக்கண நூல்கள் காவியம் பற்றி எடுத்தோதியுள்ளன.  வடமொழியில் காவியம் என வழங்கப்படுவதற்கு மாற்றாகத் தமிழில் காப்பியம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. 
மகாகாவியத்தின் பொதுவியல்புகள்
பொதுவாகக் காப்பியங்களை மங்கலத்
தொடக்கமாக அமைக்க வேண்டும் என்பது வடமொழிக் காப்பிய வடிவமைப்பாளர்களின் சிந்தனை ஆகும்.  எனினும், காப்பியக் கதையைப் பிறப்பிலிருந்து தொடங்கவேண்டும் என்ற கோட்பாடும் காணப்படுகிறது.  ஒரு காப்பியத்தை அதன் பகுதிகளாகப் பார்க்காமல், நூலை முழுமையாகப் பார்க்கும்போதுதான் கதை, கிளைக் கதை, காட்சி, உரையாடல், வருணனை, அணி எனப் பல்வேறு கூறுகளையும் ஒரு திரளாகப் பார்த்து, அதன் திரண்ட பொருளையும் நயத்தையும் உணரமுடியும் என்பது வடமொழிப் புலவர்கள் உணர்ந்தவை.  
வடமொழிக் காப்பியங்கள்
ஐரோப்பியக் காப்பியங்களைப் பற்றிக் கூற விழைவோர் ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி ஆகிய காப்பி
யங்களில் தொடங்கி விரித்துரைப்பது போன்று, இந்தியக் காப்பியங்களைப் பற்றிய கூற்றுகள் யாவும் சமஸ்கிருதம் என்னும் வடமொழியில் இயற்றப்
பட்ட இராமாயணம் மற்றும் மகா பாரதத்தில் இருந்து தொடங்குவதைக் காணலாம்.  காளிதாசன் என்னும் மகாக் கவிஞன் இயற்றிய இரகுவம்சம் மற்றும் குமாரசம்பவம் ஆகியவையும் இனிமை சிந்தும் இனிய இலக்கியங்களாகப் போற்றப்பெறுகின்றன. 
துளசிதாசர் (1543 - 1623) இயற்றிய
இராமசரித மானஸ் இந்தி மொழி
யில் தோன்றிய முதல் காப்பியம்
என்பது குறிப்பிடத்தக்கது. இராமா
யணத்தை அடிப்படையாகக் கொண்ட இக்காப்பியம், இராமனை விஷ்ணுவின் அவதாரமாகச் சித்தரிப் பதோடு, சீர்மிகு மகனாகவும், கணவனாகவும், சகோதரனாகவும், அரசனாகவும் படைத்துக் கவிதை புனைந்
திருப்பது இதன் சிறப்பாகும். 
இராமாயணம்
சமஸ்கிருத மொழியில் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட மிகப்
பழமை வாய்ந்த காப்பியம் இராமா யணம் அகும்.  இதன் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்
பட்டதாக இருக்கலாம் என்று ஆய்
வாளர்கள் கருதுகின்றனர்.  வால்மீகி இராமாயணத்தைப் பாடுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கதை மக்களிடையே வாய்மொழி வடிவில் இருந்திருக்கலாம் என்றும் பின்னர் அதற்கு வால்மீகி நூல்வடிவம் தந்திருக்கலாம் என்றும் சக்கரவர்த்தித் திருமகன் என்னும் இராமாயணத்தின் வசனநடை நூலில் இராஜாஜி குறிப்
பிட்டுள்ளார். 
வால்மீகி இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழி களிலும் பிற நாட்டு மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது.  கோசல நாட்டின் தலைநகர் அயோத்தியில் பிறந்த இராமன், அவன் மனைவி சீதை, அவன் சகோதரர்கள் மற்றும் இலங்கை அரசன் இராவணன் ஆகியோரைப் பின்னணியாகக் கொண்டு  இக்காப்பியம் வரையப்பட் டுள்ளது.  தந்தை சொல் தட்டாத தனயன், அண்ணனை மதிக்கும் தம்பிகள், இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியா மனைவி எனப் பல சீரிய கருத்துகளை இக்காப்பியம் மக்கள் முன் வைக்கிறது.  இராமனின் பயணம் என்ற பொருள் கொள்ள அமைந்ததுதான் இராமாயணம் என் னும் காப்பியத் தலைப்பு ஆகும்.
வடமொழியில் வால்மீகி எழுதிய
இராமாயணம் வால்மீகி இராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.  அவ்
வாறே, பல்வேறு இராமாயணங்கள், பாடியவர் பெயரில் வசிட்டராமா
யணம், வியாசராமாயணம், போதாயன
இராமாயணம், துளசி இராமாயணம், கம்ப இராமாயணம் அத்யத்த இராமா
யணம் என்று அழைக்கப்படுகின்றன. 
இராமாயணம் பற்றித் தமிழ் இலக்
கியங்கள் குறிப்பிட்டுக் கூறுவதைக் காணலாம்.  சிலப்பதிகாரக் காப்பியத் தில் ஆய்ச்சியர் குரவைப் பகுதியில் இராம இராவணப் போர் பற்றிக் குறிப்பிடுகிறது. பெரியாழ்வர் இராம கதையின் நிகழ்வுகளைத் தன்னுடைய பாசுரங்களில் இடம்பெறச் செய்துள் ளார்.  அவருடைய திருப்பாவைப் பாடல்களில் “சென்றங்குத் தென்னி
லங்கைச் செற்றாய் திரல் போற்றி” என்று குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.  
கம்பராமாயணம்
வடமொழியில் வான்மீகியால் இயற்றப்பட்ட இராமாயணம் என் னும் ஆதிகாவியத்தின் வழியாகத் தோன்றியதே கம்பன் இயற்றியுள்ள இராமாயணம். இதனை இயற்றிய கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் இதனைக் கம்பராமாயணம் என்றே மக்கள் வழங்கி மகிழ்கின்றனர்.  முந்து நூலில் கண்டவற்றுள் சிலவற்றைத் தமிழ் மரபுக்கு ஏற்றவாறும், சிலவற்றைச் சுருக்கியும், வேறு சிலவற்றை விரித் தும், தக்கனவற்றைப் புகுத்தியும் தன்னுடைய நூலைக் கம்பன்
சிறக்கச் செய்துள்ளதை அறிஞர் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.    கம்பனின் கவித்திறனைப் பலரும் வியந்து போற்றியுள்ளதோடு, தமிழ் இலக்கிய உலகில் அவனுக்கென்று ஓர் உயர்ந்த இடம் இருப்பது வெள்ளிடை மலை.
யாமறிந்த புலவரிலே கம்பன்  போல், வள்ளுவர் போல், இளங் கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்ற பாரதியாரின் ஆணித்தரமான கூற்று இதற்குச் சான்று. கம்பனின் காப்பியம் உருவாகும் முன்பே தமிழ் நாட்டில் இராமனின் கதை மக்களிடையே உலவி வந்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.  
கம்பராமாயணத்தின் சிறப்பு
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த புலவன் கம்பன்
என்றும், வால்மீகியின் நூலைப் பின்பற்றியே கம்பன் தனது இராமா
யணத்தைத் தமிழில் படைத்திருந்
தாலும் இது சமஸ்கிருத மூலத்திலி
ருந்து மொழியாக்கம் செய்யப்பட்
டதோ அல்லது தழுவி வரையப்பட்
டதோ அல்ல, மாறாக இது
தமிழ் மொழியையும் அவனது வாழ்
விடத்தையும் பெருமைப்படுத்திய ஒரு சிறந்த படைப்பு என்று நீலகண்ட
சாஸ்திரியார் தன்னுடைய தென்னிந்திய வரலாற்று நூலில் கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.கம்பன் தன்னுடைய காப்பியத்தின் முதல் காண்டமான பால காண்டத்தில் பாடியுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்,
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே 
என உலகங்கள் அனைத்தையும் ஆக்குவதும், காத்தலும்,நீக்கலும் ஆகிய மூன்றினையும் தொடர் வினையாக ஆற்றிக்கொண்டிருக்கும் இறைவனே தலைவர், அவரைச்
சரணடைந்தே இக்காப்பியம் புனை கின்றேன் என்கிறான் கம்பன்.  இங்குக் கம்பன் இறைவனைப் பொதுமையாகப் பார்க்கும் பாங்கினை நாம் காண்கின்றோம்.  
கம்பன் தன்னுடைய காப்பியத்தில் இராமனின் அமைதியான அறவழியை யும், இலக்குவனுடைய வேகத்தையும், பரதனுடைய பண்பட்ட நெறியையும், இராவணனுடைய அஞ்சா நெஞ்சத் தையும், கும்பகர்ணனுடைய கடமை உணர்வையும், வீடணனுடைய நெறி பிறழாத் தன்மையையும் படைத்துக் காட்டியுள்ளான்.  இராமாயணக் காப்பி யத்தில் காணப்படும் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்த பாடல்கள் அனைத்தும் கம்பனின் ஆழ்ந்த தமிழ்ப்பற்றுக்குச் சான்றுகளாகும்.  ஆயினும் கம்பன் தன்னுடைய படைப்பு பாற்கடலைப் பூனை நக்கிக் குடிப்பதற்கு முயற்சிப்பது போன்றதே என்று கூறியிருப்பது அவன் கொண்ட அவையடக்கத்தைக் காட்டுகிறது.
கம்பராமாயணம் பாயிரம், பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த
காண்டம் என்னும் பெரும் பிரிவுகளை
யும், காண்டங்கள் மீண்டும் படலங்கள் ஆகவும் பகுக்கப்பட்டுள்ளன.  
இராமநாடகக் கீர்த்தனைகள்
தமிழிசை மூவருள் சீர்காழி அருணாசலக்கவிராயர் (1711 - 1779) ஒருவர். இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளான அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப்பிள்ளை, முத்துத் தாண்டவர் ஆகியோரில் ஒருவர். இவர்தமிழ் இலக்கிய இலக்கணப் புலமையோடு வாய்மொழி இலக்கியம் என்னும் நாட்டுப்புறக் கலைகளிலும் நல்ல ஞானமுடையவர். முத்தமிழ்ப்புலமைவாய்ந்த வித்தகர். தமிழ்த்தாய்க்கு அணிகலனாக
விளங்கும் இராமநாடகக் கீர்த்தனை என்னும் அரும்பெரும் நூலை இவர் படைத்துள்ளார்.  இந்நூலில் இடம்பெற்ற பல பாடல்கள் கருநாடக இசை மேடைகளில் முழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மகாபாரதம்
மகாபாரதம் காப்பியங்கள் அனைத் திலும் நீளமானவை, அக்காலத்தில் இத்தகைய நீண்ட காப்பியங்களைப் படைப்பது ஒன்றும் புதிது அல்ல.  தேரோட்டிப் பாணர்களிடம் வழங்கி
வந்த வாய்மொழிப் பாடல்கள் வாயிலாகப் பாரதப் போர் குறித்து உருவாக்கப்பட்டது மகாபாரதம்.  சகோதரரின் சண்டையை அடிப்படை
யாகக் கொண்டு மானுட வாழ்வின் நான்கு முக்கிய பொருள்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை எடுத்தோதுவதே இக்காப்பியத்தின் அடிநாதமாக விளங்குகிறது. குரு மற்றும் பாஞ்சாலம் என்னும் இரண்டு
நாடுகளைப் பற்றியது இதன் கதைக்
களம்.  மகாபாரதத்தை இதிகாசம் என்று அழைப்பதும் உண்டு, அதனால் அண்மைக் காலங்களில் இக்காப்பியத்தில் கண்டவை வரலாற்
றுப் பதிவுகள் எனக் கூறுவாறும் உளர்.  ஒரு லட்சத்து இருபதாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இக் காப்பியத்தை வியாசர் வடமொழியில் இயற்றினார்.  
மகாபாரதம் - நாடகப் பாங்கான கதையாகவும் நீதி உபதேசமாகவும் இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது.  கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் 10,000 கவிதைகளைக் கொண்டிருந்த இக்காப்பியம் கி.பி. 400ல் 1,00,000 கவிதைகளாகப் பெருக்கம் அடைந்தது, எனினும் இது உயிரோட்டமுள்ள கவிதைப் படைப்பாக உலகம் முழுவதிலும் இடத்துக்குத் தக்க பற்பல மாற்றங்களுடன் பல மொழிகளில் மீள்படைப்பாக ஆனது.  இராஜாஜி மகாபாரதக் கதையை வியாசர் விருந்து என்ற நூலாகப் படைத்துள்ளது தமிழில் மகாபாரதத்தை அறிந்து கொள்ள உதவும் சீரிய நூலாகும்.
வில்லிபாரதம்
கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரும், கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அரங்கநாதக் கவிராய
ரும், கி.பி. பதினெட்டாம் நூற்றாண்
டில் நல்லாப்பிள்ளையும் மகாபாரதத் தின் தழுவல்களைத் தமிழில் எழுதி
யுள்ளனர்.   இவற்றுள் வில்லிபுத்தூரார் இயற்றிய மகாபாரதத்தின் தமிழ்ப்
படைப்பு பல்லோராலும் புகழப்பட்ட தாகும்.  இயற்றிய புலவரின் பெயரில் வில்லிபுத்தூரார் என்றிருந்தாலும், இவர் திருமுனைபாடி அருகிலுள்ள
சனியூரைச் சேர்ந்தவர் என்றும், கொங்கு
மண்டலத்தைச் சேர்ந்தவர் என்றும்
வேறுபடக் கூறுவதுண்டு.  வடமொழி
யில் 18 பருவங்கள் என்னும் பிரிவு
களைக் கொண்ட இதனை வில்லிபுத் தூரார் 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களாக உருவாக்கியுள்ளார்.  வில்லிபுத்தூராரின் காப்பியத்தைப் பின்னர் நல்லாப்பிள்ளை என்பார்
பதினையாயிரத்து முந்நூறு பாடல் களாகப் பெருக்கி அமைத்தார். 
பகவத் கீதை
மகாபாரதக் காவியத்தின் ஒரு பகுதியாக உருவானதே பகவத் கீதை ஆகும்.  பகவத் கீதை என்றால் கடவுளின் பாடல் என்று பொருள் கூறலாம்.  பாண்டவருக்கும் கௌரவர்க்கும் இடையே நடைபெற்ற குருசேத்திரப் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு கிருஷ்ணர் கூறிய அறவுரைகளே பகவத் கீதை என அழைக்கப்படுகிறது.  போர்க்களத்தில் எதிரணியில் இருப்
பவர் உறவு முறையினர் எனப்பார்க் காது, தர்மத்திற்காக மட்டுமே போரிடவேண்டும் என்று கிருஷ்ணர் எடுத்துக்கூறும் கருத்துகளும் அர்ச்சுனனின் வாதங்களும் உரையாடல்களாக இந்நூலில் அமைந்துள்ளன.  இந்நூல் எழுநூறு ஸ்லோகங்களையும் பதினெட்டு அத்தியாயங்களையும் கொண்டது.  இராஜாஜியின் கைவிளக்கு பகவத் கீதைக்கு உரையாக அமைந்த நூல் ஆகும்.  கீதையின் சாரமாக  மக்களிடையே உலவிவரும்,
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே      நடக்கும்.
என்பன போன்ற பல அரிய
தத்துவங்கள் பகவத் கீதையின் படிப்
பினைகளாகும்.  பாரதியாரின் பகவத் கீதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மிகச் சிறந்த படைப்பு ஆகும்.  மூல நூலில் காணப்படும் கருத்துகளில் எவ்வித சேதாரமும் இல்லாமல் தமிழில் படைக்கப்பட்டுள்ளதால், பகவத் கீதையை இம்மொழிபெயர்ப்பின் வாயிலாக யாவரும் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. 
பாஞ்சாலி சபதம்
பாரதக் கதையின் முக்கியப் பகுதியான தருமரின் சூதாட்டமும், அதில் திரௌபதியையும் தம்பிகளையும் தருமர் இழந்து போவதையும் அடிப்
படையாகக் கொண்டே குருசேத்
திரப் போர் தொடங்குகிறது.  இந்த அடிப்படைக் கதைக் கருவை மைய
மாக வைத்துக் கொண்டே “பாஞ்சாலி சபதம்” என்னும் நூலை மகாக்கவி பாரதியார் படைத்துள்ளார்.  பாரதியின் கவித்திறனால் இப்படைப்பு பாரதக்
கதையினைத் தமிழில் வழங்கிய மேலான படைப்பாகப் போற்றப்படு கிறது.  பாரதியின் இக்கவிதை நூல் அந்நியர் ஆட்சியில் வீழ்ந்த பாரத நாட்டையும் அதன் மீட்பையும் பற்றிப் பாடப்பட்ட உருவகப் படைப்பு என்பர் ஆய்வாளர்.
மகாபாரதமும் நாட்டுப்புற இலக்கியமும் 
இராமாயணம் மகாபாரதம் ஆகிய இரண்டு காப்பியங்களின் பகுதிகளில் இருந்து கதைகளை உருவாக்கித் தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கணியன் கூத்து எனப் பல்வேறு நாட்டுப்புறக் கலை வடிவங்களாகவும் மேடை நாடகங்களாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.  இக்காப்பியத்தின் பகுதிகளிலிருந்து மண், பெண் பேராசையினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மனித வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய அறங்கள் பற்றியும், மனிதன் கடைப்பிடிக்கத் தகாத தீய ஒழுக்கங்கள் பற்றியும் கதைகள் அமைக்கப்பட்டு, காலம், இடம் கருதி நாட்டுப்புறக் கலைகளாக வடிவம் பெற்றுள்ளன. மகாபாரத்தில் இருந்து பல்வேறு கதைகள் நாட்டுப்புறப் பாடல்களாக யாக்கப்பட்டுள்ளன.  அவற்றுள் அல்லி அரசாணி மாலை, புலந்திரன் மாலை, பவளக்கொடி மாலை, நளவெண்பா, குசேலோபாக்கியானம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.   
கிராமங்களில் மழை வேண்டி
‘விராட பருவக் கூத்து’, மயானக் கொள்ளைக் கொண்டாட்டத்தின்போது மன்மதன் எரிப்பு, இறந்தவர் நினை
வாக கர்ண மோட்சம் என்பன நிகழ்த்
தப்பட்டு வருகின்றன.  திரௌபதி அம்மன் கோவில்களில்,திரௌபதி கல்யாணம், சுபத்திரை கல்யாணம், ராஜசூயயாகம், திரௌபதி துகில் உரிதல், அர்ஜுனன் தபசு, குறவஞ்சி, கீசகவதம், கிருஷ்ணன் தூது, அபிமன்யு போர், கர்ணமோட்சம், பதினெட்டாம் போர் எனப் 11 நாள்கள் கூத்துகள் நடைபெறும்.  இதே போன்று இராமர் பட்டாபிஷேகம், பக்த அனுமான், சீதா கல்யாணம் போன்ற இராமாயணக் கதைகளும் இந்நாட்டுப்புறக் கலைகளில் இடம்  பெறுவதுண்டு.  
தொடரும்